பணி மாறுதலாகிச் செல்லும் செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் கா.பிரியாவுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்ற வருவாய்த் துறை அலுவலர்கள். 
Regional02

மாநில நில நிர்வாக ஆணையரகத்துக்கு பணி மாறுதலாகிச் செல்லும் - மாவட்ட வருவாய் அலுவலருக்கு பாராட்டு :

செய்திப்பிரிவு

2019-ல் செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மாவட்ட வருவாய் அலுவலராக கா.பிரியா நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் தற்போது மாநில நில நிர்வாக ஆணையரகத்தில் இணை இயக்குநராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, அவருக்கு வருவாய்த் துறை சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வம், மாவட்ட மகளிர் திட்டக் குழுத் தலைவர் தர், வட்டாட்சியர்கள் சரவணன், செந்தில், கனிமொழி, சிவசங்கரன், வேல்முருகன், ரஞ்சினி, செல்வசீலன் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் தனி மாவட்ட வருவாய் அலுவலராகப் பணிபுரிந்து வந்த மேனுவல் ராஜ், செங்கல்பட்டு மாவட்டவருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT