திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டை பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து உள்ள நாட்களில் இத்தடுப்பணையின் தென்புறம் கம்பரசம்பேட்டை, வடபுறம் கீதா நகர் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் குளிப்பது வழக்கம்.
இச்சமயங்களில் உடைமாற்றும் அறை, கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் பெண்கள் மற்றும் குழந்தைகள் சிரமப்படுவதாக வரப்பெற்ற கோரிக்கையின் அடிப்படையில், ரங்கம் தொகுதி எம்எல்ஏ எம்.பழனியாண்டி நேற்று தடுப்பணை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும்படி பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தினார்.