Regional01

நெல்லை மாவட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கிறது. இதனால் 2-வது தவணை செலுத்த வேண்டியவர்கள் ஏமாற்ற மடைந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 84 மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் இருப்பில் உள்ள கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. மாவட்டத்திலுள்ள பல்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 5,070 கோவிஷீல்டு தடுப்பூசிகள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

அம்பாசமுத்திரம், நாங்குநேரி, கூடங்குளம், வள்ளியூர் அரசு மருத்துவமனைகளுக்கு தலா 100 வீதம் 400 கோவிஷீல்டு தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன. திருநெல்வேலி மாநகர பகுதிகளில் உள்ள நகர்ப்புற சுகாதார மையங்களுக்கு 2,950 தடுப்பூசிகள், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 1,130 தடுப்பூசிகள் என மொத்தம் 9,550 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் குறிப்பிட்ட மையங்களில் வரிசையில் நின்று கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அதேநேரத்தில் கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாட்டால் பல்வேறு மையங்களுக்கு 2-வது தவணை செலுத்த வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மாவட்டத்தில் முக்கூடல், கல்லூர், இடைகால், அம்பாசமுத்திரம், வைராவிகுளம், நாங்குநேரியில் உள்ள மையங்களுக்கு இருப்பில் இருந்த 110 கோவாக்சின் தடுப்பூசிகள் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 2-வது தவணையாக இந்த தடுப்பூசிகள் போடப்பட்டன. மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும் பினர்.

SCROLL FOR NEXT