Regional02

வங்கதேசத்தை சேர்ந்தவர் கைது :

செய்திப்பிரிவு

வங்கதேச நாட்டை சேர்ந்தவரை திருப்பூரில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பராகனாஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் எனக்கூறிதிருப்பூர் பாண்டியன் நகரில் 2ஆண்டுகளாக முகமது சொஹல் ராணா (28) வசித்து வந்தார். அதே பகுதியில், தனியார் பின்னலாடை நிறுவனத்தில் தையல் தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், அவர் வங்கதேச நாட்டை சேர்ந்தவர் என சந்தேகம் எழ, திருமுருகன்பூண்டி காவல்துறையினர் விசாரித்தனர். இதில், வங்கதேச நாட்டை சேர்ந்த நவஹாலே மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பராகனாஸ் மாவட்டம் என்ற முகவரி போலியானது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைபோலீஸார் நேற்று கைது செய்துதொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவருடன் தொடர்பில் இருந்த பிற நபர்கள் யாரேனும் தங்கியிருந்தார்களா என்பது குறித்தும் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT