ஈரோடு, திருப்பூர், நீலகிரி மற்றும் கோவை புறநகர் பகுதிகள் அடங்கிய ரோட்டரி சங்க (எண் 3203) கவர்னராக வெற்றி பெற்ற கே.சண்முகசுந்தரத்திற்கு நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர். 
Regional02

கோபியில் ரோட்டரி சங்க கவர்னர் பதவியேற்பு விழா :

செய்திப்பிரிவு

ஈரோடு, திருப்பூர், நீலகிரி மற்றும் கோவை புறநகர் பகுதிகள் அடங்கிய ரோட்டரி சங்க (எண் 3203) கவர்னர் தேர்தலில், கே.சண்முகசுந்தரம் வெற்றி பெற்று கவர்னராக பொறுப்பேற்றார்.

கோபியில் நடந்த பதவியேற்புவிழாவுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.வெங்கடசுப்பிரமணியம் தலைமை வகித்தார். ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி தலைவர் வீ. ராஜமாணிக்கம், திருப்பூர் மாவட்ட முன்னாள் கவர்னர் எல்.நாராயணசாமி ஆகியோர் புதிய ஆளுநருக்கு ‘காலர்’ அணிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், புதிய கவர்னராக தேர்வு பெற்ற கே.சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவிபரிமளாதேவி ஆகியோர், ரூ.28 லட்சமும் மற்றும் வீ.ராஜமாணிக்கம் ரூ.28 லட்சமும் அகில உலக ரோட்டரி சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினர். மேலும், திருப்பூர் பிரைடு ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.1 கோடி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது.

பன்னாட்டு ரோட்டரி சங்கங்களின் தலைவர் சேகர் மேத்தா, இயக்குநர் வெங்கடேஷ் ஆகியோர் காணொலி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

விழாவில், கோபி எம்.எல்.ஏ. கே.ஏ.செங்கோட்டையன், முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே.சுப்பிரமணியம், முன்னாள் ஆளூநர்கள் சகாதேவன், பி.எம்.சிவசங்கரன், மாவட்ட பயிற்றுநர் அருள்ஜோதி கார்த்திகேயன், நிர்வாகிகள் இளங்குமரன், எம்.சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

SCROLL FOR NEXT