Regional02

மேட்டூர் அணை பூங்காவுக்கு வர - இன்றும், நாளையும் பொதுமக்களுக்கு தடை : மேட்டூர் சார் ஆட்சியர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஆடி மாத பிறப்பை முன்னிட்டு மக்கள் அதிகளவில் வரும் நிலையில் தொற்று பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இன்றும், நாளையும் மேட்டூர் அணை பூங்காவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேட்டூர் சார் ஆட்சியர் பிரதாப் சிங் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மேட்டூர் அணை மற்றும் மேட்டூர் அணை பூங்காவுக்கு ஆடி முதல் நாளை முன்னிட்டு வழக்கத்தைவிட அதிகமான பொதுமக்கள் வருகை தருவார்கள் . தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணை பகுதியில் பொதுமக்களின் கூட்டம் அதிகமானால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத நிலை ஏற்பட்டு தொற்று பரவல் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, தொற்று தடுப்பு நடவடிக்கையாக இன்றும், நாளையும் (17, 18-ம் தேதி) இரு தினங்கள் மேட்டூர் அணை மற்றும் அணை பூங்காவை பொதுமக்கள் சுற்றி பார்க்க தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT