Regional02

முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் :

செய்திப்பிரிவு

பெரம்பலூர் தெற்கு ஏரிக்கரை யில் அமைந்துள்ள முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் சுதர்சன ஹோமத்துக்குப் பின், பூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து கடங்கள் புறப்பட்டு, மங்கள வாத்தியம் முழங்க கோயில் கோபுர கலசம் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் அரசின் உத்தரவின்படி சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT