தென்காசியில் உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
Regional01

உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் :

செய்திப்பிரிவு

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக மக்கள்தொகை தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி யும், விழிப்புணர்வு வரைபடப் போட்டியும், கருத்தரங்கில் வெற்றி பெற்ற செவிலியர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா செவிலியர்களுக்கு பரிசளித்தார். மக்கள்தொகை விழிப்புணர்வு பிரச்சார வாகன பயணத்தை கொடியசைத்து அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் நெடுமாறன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அருணா, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT