Regional02

ஆகாயத் தாமரையில் இருந்து - மதிப்புக்கூட்டு பொருள் தயாரிக்க பயிற்சி :

செய்திப்பிரிவு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டத்தின் சார்பில், ஆகாயத் தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் தொடர்பாக, மகளிர் குழுவினருக்கான பயிற்சி திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தொடங்கி வைத்தார். உதவி ஆட்சியர் பயிற்சி ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிச்சை, கோட்டாட்சியர் கோகிலா, நபார்டு மாவட்ட திட்ட மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், மதுரை சிறுதொழில் மேம்பாட்டு கழக மேலாளர் பழனிவேல் முருகன், வட்டாட்சியர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராணி, அலமேலு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT