Regional03

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது மைதீன் (53). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா வழக்கில் சொக்கம்பட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கெனவே கஞ்சா வழக்குகள் உள்ளன. இவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க எஸ்பி கிருஷ்ணராஜ் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் கோபால சுந்தரராஜ் உத்தரவிட்டடார். இதையடுத்து முகமது மைதீன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT