சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று (16-ம் தேதி) காலை 10 மணி முதல் 12 மணி வரை குமரன் நகர், மாரியம்மன் கோயில் தெரு, பழனியப்பா நகர், அல்ராஜ் தெரு, நியூ பேர்லேண்ட்ஸ் 5-வது கிராஸ், என்ஜிஜிஓ காலனி, கலைவாணர் தெரு, பார்க் தெரு, மன்னார்பாளையம் பிரிவு ரோடு, ஜாமியா மஜித் தெரு, பாரதியார் தெரு, சவுந்தர் ஐயர் தெரு, திருச்சி மெயின் ரோடு, திருவேங்கடம் நகர், மஹபூப் தெரு, திருஞானம் நகர் ஆகிய பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடக்கவுள்ளது.
பிற்பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை வன்னியர் நகர், காசக்காரனூர், சிவதாபுரம், கிழக்கு தெரு, சக்தி நகர், வசந்தபுரம், ராம் நகர், நாகைய்யர் தெரு, மல்லிச்செட்டி தெரு, சின்ன மாரியம்மன் கோயில் தெரு, பட்ட நாயக்கர் காடு, ஆறுமுக தெரு, சாமுண்டி தெரு, ராம்பிள்ளை தெரு, செங்கல்பட்டி, பெருமாள் கோயில் மேடு ஆகிய பகுதிகளில் முகாம் நடக்கவுள்ளது.
மேலும், நண்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை கம்பர் தெரு, சின்னேரிவயல்காடு, மஜித் தெரு, தம்மண்ணன் ரோடு, பாலாஜி நகர், பங்களா நகர், பெருமாள் கோயில் தெரு, பால் தெரு, கனகராஜ கணபதி தெரு, முருகப்பகவுண்டர்காடு, கிருஷ்ணசாமி தெரு, குமரன் தெரு, தம்மண்ண செட்டி ரோடு, ராஜா தெரு, தெற்கு முனியப்பன் கோயில் தெரு, சக்தி நகர் ஆகிய பகுதிகளிலும் முகாம் நடக்கவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.