கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ், நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக சிதம்பரத்தில் நேற்று நகர காங்கிரஸ் தலைவர் பாலதண்டாயுதம் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து காங்கிரஸின் தகவல் அறியும் உரிமை துறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நந்தினி தலைமையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் செந்தில் நாதன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில செயலாளர் சித்தார்த்தன் மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, வெங்கடேசன் மற்றும் குமார், சின்னத்தம்பி, இளைஞர் காங்கிரஸ் சட்டமன்ற தொகுதி தலைவர் ஆனந்த், நந்தகோபன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் அஞ்சம்மாள் நன்றி கூறினார்.