கோவில்பட்டி ரயில் நிலையத்தில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஏடிஎம் திறக்கப்பட்டது. 
Regional02

ரயில் நிலையத்தில் டிஎம்பி ஏடிஎம் திறப்பு :

செய்திப்பிரிவு

பயணிகள் வசதிக்காக தூத்துக்குடி, கோவில்பட்டி, மானாமதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் ஏடிஎம் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.வி.ராமமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு, நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. வங்கியின் நூறாவது ஆண்டை முன்னிட்டு தூத்துக்குடி, கோவில்பட்டி, மானாமதுரை, திண்டுக்கல் ஆகிய நான்கு ரயில் நிலையங்களில் புதிய ஏடிஎம் வசதி ஜூலை 12-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் சேவை மூலம் வங்கி வசதிகளை 24 மணி நேரமும் மக்கள் பெறும் வகையில் மொத்தம் 1,397 ஏடிஎம், பணம் செலுத்தும் இயந்திரம் மற்றும் இ-லாபி போன்ற வசதிகளை செயல்படுத்தியுள்ளோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT