பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மகளிர் காங்கிரஸ் சார்பில் ஆசாரிபள்ளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிர் அணி தலைவர் அருள் சபிதா தலைமை வகித்தார். விஜய் வசந்த் எம்.பி. கலந்துகொண்டு பேசினார். கன்னியாகுமரி கிழக்குமாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.