Regional01

ரேஷன் அரிசி பதுக்கியவர்கள் குண்டர் சட்டத்தில் கைது :

செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் ரேஷன் அரிசி பதுக்கல் மற்றும் கடத்தலில் ஈடுபட்டுவந்த 3 பேர் குண்டர் சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலப்பாளையம் நாகம்மாள் புரத்தை சேர்ந்த சிவபாலன் (42), திம்மராஜபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த தங்கபாண்டி (34), உத்தம பாண்டியன்குளத்தை சேர்ந்த மகாராஜன் (40) ஆகியோர் ரேஷன் அரிசி பதுக்கல் மற்றும் கடத்தலில் ஈடுபட்டுவந்துள்ளனர். இதையடுத்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மதுரை மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் எம். பாஸ்கரன் உள்ளிட்டோர் பரிந்துரை செய்தனர். அதை ஏற்று 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் செந்தாமரைக்கண்ணன் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT