Regional01

இன்று ஆனி திருமஞ்சன விழா :

செய்திப்பிரிவு

சிவ பக்தர்கள் வழிபாட்டுக்குரிய ஆனி திருமஞ்சன விழா சிவாலயங்களில் இன்று நடக்கிறது. நடராஜருக்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று நட்சத்திரம், மூன்று திதியில் அபிேஷகம் நடக்கும். அந்த சமயத்தில் மட்டும் நடராஜர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.

ஈரோடு கோட்டை வாராணாம்பிகை அம்மன் சமேத ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில் மற்றும் மங்களாம்பிகை சமேத மகிமாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவாலயக்களில் இன்று (15-ம் தேதி) ஆனி திருமஞ்சன விழா நடக்கிறது. இந்நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.இதனால் பக்தர்கள் இல்லாமல், நடராஜர் அபிஷேகம் மட்டும் நடக்கிறது.

ஆனி திருமஞ்சனத்தின்போது நடக்கும் சுவாமி திருவீதி உலா ரத்து செய்யப்பட்டுள்ளது. நடராஜர் அபிஷகம், அலங்காரம், மகா தீபாராதனைக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்க படுவார்கள் என இந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால், பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT