Regional01

ஈரோட்டில் கரோனா பாதிப்பு குறைவு - கல்லூரிகளில் செயல்பட்ட சிகிச்சை மையங்கள் மூடல் :

செய்திப்பிரிவு

ஈரோட்டில் கரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், இரு கல்லூரிகளில் செயல்பட்டு வந்த கரோனா சிகிச்சை மையங்கள் மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலை காரணமாக, நாள்தோறும் 1500-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால், மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், தனியார் கல்லூரிகள், பள்ளிகளில் தற்காலிக கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றால்பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 200-க்கும் கீழாக குறைந்துள்ளது. இதனால், தற்காலிக சிகிச்சைக்காக அமைக்கப்பட்ட மையங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வேளாளர் கல்லூரி மற்றும் நந்தா கல்லூரியில் தலா 250 படுக்கை வசதியுடன் கூடிய தற்காலிக கரோனா சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளது. அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கல்லூரி நிர்வாகத்திடம் மீண்டும் கல்லூரி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT