தேவாரம் ஜமீனுக்குச் சொந்தமான சொத்துகளை போலி ஆவணம் மூலம் அபகரிக்க செய்ய முயற்சிப்பதாக வாரிசுதாரர்கள் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து எஸ்.சிவசந்தர் அளித்துள்ள மனு விவரம்: தேவாரம் ஜமீன் பொம்மு நாயக்கர் வாரிசுகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் தேனியில் உள்ளன. இவற்றை வாரிசுதாரர்கள் நிர்வகிக்கிறோம். இந்நிலையில் போலி ஆவணம் மூலம் சிலர் இச்சொத்துகளுக்கான பத்திரத்தை பதிவு செய்துள்ளனர். தேனி பேருந்துநிலையத்துக்கு எங்களிடம் இருந்த 60 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதையும் தங்களுடைய சொத்து போல ஆவணங்களை தயாரித் துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.