Regional01

ஊராட்சி தலைவரின் கணவர் குண்டர் சட்டத்தில் கைது :

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பாண்டியூர் கிராமத்தில் ஊராட்சித் தலைவரின் கணவர் சாமிதுரை தரப்பினருக்கும், அதே ஊரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் தரப்பினருக்கும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இருதரப் பினரும் மோதிக் கொண்டனர். அப்போது ஏராளமான வீடுகள் மற்றும் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. ஐந்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அரிவாள் வெட்டும் விழுந்தது.

இது தொடர்பாக நயினார் கோவில் போலீஸார் ஊராட்சித் தலைவரின் கணவர் சாமித்துரை உள்ளிட்ட இருதரப்பையும் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் சாமிதுரையை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், ஆட்சியருக்கு பரிந் துரைத்தார். அதன்படி ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா குண்டர் சட்டத்தின் கீழ் சாமித்துரையை கைது செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.

SCROLL FOR NEXT