தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து 4-வதுபைப்லைன் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
பெரும்பாலான வீடுகளில் மின்சார மோட்டார் பொறுத்தி குடிநீரை உறிஞ்சி எடுப்பதால் கடை மடை பகுதிகளுக்கு குடிநீர் சரியாக செல்வதில்லை என புகார்கள்வந்தன. மேலும், மோட்டார்மூலம் குடிநீரை உறிஞ்சி எடுப்பதால் குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இதை தடுக்கும் வகையில், மாநகராட்சி ஆணையர் சாரு உத்தரவின்பேரில் அந்தந்த மண்டலஉதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், டேப் ஆய்வாளர்கள், வால்வு ஆபரேட்டர்கள் கொண்ட குழுவினர் வீடு வீடாக சோதனை நடத்தினர்.
முதல் நாளிலேயே மாநகராட்சி முழுவதும் 19 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று தினமும்சோதனை நடைபெறும். தொடர்ந்து குடிநீர் உறிஞ்சி எடுப்பது கண்டறியப்பட்டால் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.