ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் 
Regional01

திருச்சி மாநகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு :

செய்திப்பிரிவு

திருச்சி மாநகராட்சியின் புதிய ஆணையராக ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர், இதற்கு முன் நகராட்சி நிர்வாக செங்கல்பட்டு மண்டல இயக்குநராக பணியாற்றினார். ஆணையராக பொறுப்பேற்ற பிறகு முஜிபுர் ரகுமான் கூறும்போது, “மாநகர மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கவும் முன்னுரிமை அளிக்கப்படும்” என்றார்.

இங்கு ஏற்கெனவே ஆணையராக பணியாற்றிய சு.சிவசுப்பிரமணியன், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT