Regional01

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் - முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்துள்ள பயனாளிகள், தங்கள் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்திருந்தால், குழந்தை பாதுகாப்பு திட்ட வைப்புத் தொகை ரசீதுகள், குழந்தைகளின் பிறப்புச் சான்று, குழந்தைகளின் வங்கி கணக்கு (தொடர் வங்கி பரிவர்த்தனையில் இருக்க வேண்டும்), குழந்தைகளின் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றச் சான்று, ஆதார் கார்டு நகல் ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.

ஆவணங்களுடன் விண்ணப்பித்தால், குழந்தை களின் வங்கிக் கணக்கில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வுத் தொகை ரூ.25 ஆயிரம் வட்டியுடன் சேர்த்து வரவு வைக்கப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், பி4- 107 சுப்பிரமணியபுரம் தெரு, வஉசி மைதானம் எதிரில், திருவனந்தபுரம் ரோடு, பாளையங்கோட்டை, திருநெல் வேலி 627002. தொலைபேசி எண்: 0462 2576265.

SCROLL FOR NEXT