திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டல மாம்பழ சங்கம் மற்றும் 241-வது வருடாந்திர தோத்திர பண்டிகையின் 2-ம் நாள் விழாவில் ஏழைகளுக்கு அரிசி மற்றும் காணிக்கைகளை கிறிஸ்தவர்கள் வழங்கினர்.
பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் இந்த விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 2-ம் நாளான நேற்று பிரதான ஆராதனை மற்றும் திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. பிரதம பேராயரின் ஆணையாளர் பேராயர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். லே செயலாளர் ஜெயசிங், உப தலைவர் சுவாமிதாஸ், குருத்துவ செயலாளர் பாஸ்கர் கனகராஜ், பொருளாளர் மனோகர், திருநெல்வேலி எம்.பி. ஞானதிரவியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கொல்லம் கொட்டாரக்கரா திருமண்டல பேராயர் ஓமன் ஜார்ஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தேவ செய்தி அளித்தார். விழாவையொட்டி நூற்றாண்டு மண்டபத்தின் வெளியே ஏழை மக்களுக்கு கிறிஸ்தவர்கள் அரிசி, உணவுப் பொருட்கள் மற்றும் காணிக்கைகளை வழங்கினர்.
விழாவின் 3-ம் நாளான இன்று பாளையங்கோட்டை கதீட்ரல் பேராலயத்தில் தோத்திர பண்டிகை ஆராதனை நடைபெறுகிறது.
இன்று பாளையங்கோட்டை கதீட்ரல் பேராலயத்தில் தோத்திர பண்டிகை ஆராதனை நடைபெறுகிறது.