திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குநர் ரா. ராஜ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விதை விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள விதைகளின் இருப்பு மற்றும் விற்பனை விவரங்களை வியாழன் தோறும் சீட் ஆப் என்னும் விதை செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும்.
இதனால் எவ்வித விடுதலும் இன்றி விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுவதால் தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
மேலும், விவசாயிகள் தங்க ளுக்கு தேவைப்படும் விதை எந்த விற்பனையாளரிடம் எவ்வளவு இருப்பில் உள்ளது என்பதை சம்பந்தப்பட்ட விற் பனையாளரின் செல்போன் எண்ணுடன் அறிந்து கொள்ள முடியும்.
தனியார் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் உண்மை நிலை விதைகள் அனைத்தையும் கோவை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவு எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு தட்பவெப்ப நிலைக்கு பொரு த்தமில்லாத மற்றும் தரமற்ற தனியார் நிறுவன விதைகள் விற்பனை செய்யப்படுவது கட்டுப் படுத்தப்பட்டு கண் காணிக்கப்பட்டு வருகிறது.
பதிவு எண் பெறாத விதைகளை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கவோ அல்லது விநியோ கிக்கவோ கூடாது. விதை வாங்கும் விவசாயிகளுக்கு விற்பனை ரசீது கட்டாயம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.