Regional02

கஞ்சா விற்றதாக 3 பேர் கைது :

செய்திப்பிரிவு

தி.மலையில் கஞ்சா விற்பனை தொடர்பாக மாவட்ட எஸ்பி பவன்குமார் ரெட்டிக்கு கிடைத்ததகவலின் பேரில், உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில், நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி, உதவி காவல் ஆய்வாளர் சுந்தரேசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் திடீர் சோதனையில் நேற்று ஈடுபட்டனர்.

இதில், தி.மலை சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி கவிதா (40) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டது. அதேபோல், தி.மலை அண்ணாநகர் 3-வது தெருவைச் சேர்ந்த தமிழரசன் (28) என்பவரிடமிருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவும், தி.மலை சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த நளினி (28) என்பவரிடமிருந்து ஒரு கிலோ200 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT