வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் சார்பில் கடலூர் வட்டாரம் நத்தப்பட்டு கிராமத்தில் முன்னோடி விவசாயி சண்முகம் என்பவரது தென்னை வயலில் தென்னைநார்க்கழிவை மக்க வைத்து உரமாக்கு வது குறித்து விவசாயிகளுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. கடலூர் வேளாண்மை துணை இயக்குநர் (மத் திய திட்டம்) கென்னடி ஜெபக்குமார் கலந்து கொண்டு தென்னை நார்க்கழி வுகளை விரைவில் மக்க வைத்து பயன்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து விரிவாக விளக்கினார்.
கடலூர் வேளாண்மை உதவி இயக்குநர் பூவராகன் பேசுகையில், தென்னை நார்க்கழிவுகளை 4 அடி நீளம், 3 அடி அகலத்திற்கு 3 அங்குல உயரத்திற்கு பரப்பிய பின் நன்றாக நீர் தெளித்து ஈரப்படுத்தவும். பின்னர் 1 கிலோ யூரியாவை இந்த அடுக்கின் மேல் தூவ வேண்டும். இதன் மேல் இரண்டாம் அடுக்காக தென்னை நார்க்கழிவுகளை பரப்பி அதன் மேல் பிளிரோட்டஸ் பூசன வித்துக்கள் பரப்ப வேண்டும். இதேபோல், தென்னை நார்க்கழிவு மற்றும் யூரியா அடுத்த அடுக்கில் பரப்பி, அதன் மேல் மற்றும் ஒரு அடுக்கில் நார்க்கழிவு மற்றும் பூசன வித்து பரப்ப வேண்டும். இவ்வாறு அடுத்தடுத்த அடுக்குகளில் யூரியாவையும் பூசன வித்துக்களையும் மாறிமாறி பரப்ப வேண்டும். இந்த கழிவுக் குவியலை 5 நாட்களுக்கு ஒரு முறை கிளறிவிட வேண்டும். இதனால் புதிய காற்று உட்சென்று ஏற்கெனவே அங்கு உபயோகப்படுத்தப்பட்ட காற்றை வெளியேற்றுகிறது. இந்த மட்க வைத்தல் காற்றின் உதவியால் நடைபெறுகிறது” என்றார்.