குறிஞ்சிப்பாடி வட்டார தோட்டக் கலை துறை உதவி இயக்குநர் சங்கீதா வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பு:
குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் 2021-22-ம் நிதி ஆண்டிற்கான தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வி.ஆர்.ஐ 3 ரக முந்திரி ஒட்டு செடிகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
மேலும் அடர் நடவு முறையில் ஏக்கருக்கு 400 செடிகளும், சாதாரண நடவு முறையில் ஏக்கருக்கு 204 செடிகளும் வழங்கப்படுகிறது.
விவசாயிகள் தங்களது நிலத்திற்கான கணினி சிட்டா, அடங்கல், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயனடையுமாறு கேட் டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.