Regional01

இளைஞர் மர்ம மரணம் :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் திருமழபாடியை அடுத்த குலமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(32). பட்டதாரியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது இவர் தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கியுள்ளனர். ரஞ்சித்குமார் மட்டும் திண்ணையில் படுத்து தூங்கியுள்ளார். நேற்று வெகுநேரமாகியும் எழுந்திருக்காத நிலையில் பெற்றோர் அவரை எழுப்பியபோது, ரஞ்சித்குமார் இறந்து கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து, தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக வெங்கனூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT