Regional01

பெரம்பலூர் ராணுவ வீரர் உடலுக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அஞ்சலி :

செய்திப்பிரிவு

மேற்கு வங்க மாநிலத்தில் பணியின்போது உயிரிழந்த பெரம்பலூர் ராணுவ வீரரின் உடலுக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று அஞ்சலி செலுத்தினார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் காரை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர்(43). மேற்கு வங்க மாநிலத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்த இவர் கடந்த ஜூலை 11 அன்று பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்தார்.

உயிரிழந்த சங்கருக்கு ஜெகதீஸ்வரி (37) என்ற மனைவியும், விஷால் (11), ரித்தியன் (7) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த சங்கரின் உடல், ராணுவ நடைமுறைகள் முடிந்து நேற்று முன்தினம் நள்ளிரவு காரை கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு நேற்று நடைபெற்ற இறுதிச் சடங்கில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதில் மாவட்ட ஆட்சியர்  வெங்கட பிரியா, எம்எல்ஏ பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், ராணுவ வீரர்களின் அணிவகுப்புடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க சங்கர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT