Regional01

உவரி கடலில் குளித்த அண்ணன், தம்பி மரணம் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் உவரி கடலில் குளித்த பொறியியல், பாலிெடக்னிக் கல்லூரி மாணவர்களான அண்ணன், தம்பி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாயாரின் 11-வது நாள் நினைவுச் சடங்கில் பங்கேற்றவர்களை கடல் அலை இழுத்துச் சென்றது.

வள்ளியூர் அருகே உள்ள கீழ துரைகுடியிருப்பை சேர்ந்தவர் அருள். இவரது மகன்கள் ஆக்னல் (18), பிரவீன் (16). பொறியியல் மற்றும் பாலிெடக்னிக் கல்லூரியில் படித்து வந்தனர்.

இவர்களது தாய் ரெனி உடல் நலக்குறைவால் இறந்து 15 நாட்கள் ஆகிறது. இதையொட்டி அவரது நினைவு சடங்கை நிறைவேற்றுவதற்காக இருவரும் தங்களது குடும்பத்தினருடன் உவரிக்கு சென்றனர்.

அங்குள்ள அந்தோனியார் ஆலயத்தில் வழிபட்டுவிட்டு, இரு வரும் மொட்டை போட்டுள்ளனர். பின்னர் வேளாங்கண்ணி மாதா குருசடி அருகே கடலில் குளித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக எழுந்த ராட்சத அலையில் இருவரும் சிக்கினர். தண்ணீருக்குள் இழுத்துச் செல்லப்பட்ட இருவரையும் அங்கிருந்த மீனவர்கள் மீட்டு திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஏற்கெனவே அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கூடங்குளம் கடலோர காவல்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT