பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பூமயில் தலைமை வகித்தார்.மாவட்டத் தலைவர் விஜயலெட்சுமி, துணைத் தலைவர் கலைச்செல்வி, மாநிலச் செயலாளர் லெட்சுமி உள்ளிட்டோர் பேசினர். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து,கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
கோவில்பட்டி
எட்டயபுரத்தில் சிஐடியு நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், ஆட்டோ சங்க தலைவர் கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் கு.ரவீந்திரன் தொடங்கி வைத்தார்.