கொலைகள் மற்றும் சாதிய தாக்குதல்களைக் கண்டித்து விருதுநகரில் தமிழ்ப் புலிகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலர் வேலுபுள்ள பிரபாகரன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்டச் செயலர் தமிழ்முருகன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, கம்பம் திருநாவுக்கரசு, பள்ளிப்பாளையம் ரவி, தம்மம்பட்டி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கொலை சம்பவத்தைக் கண்டித்தும், தொடர்ந்து நடத்து வரும் தலித் மக்கள் மீதான சாதிய தாக்குதல்களைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.