தடுப்பூசி பற்றாக்குறையைக் கண்டித்து தேனி ஆட்சியர் அலுவலகம் முன் அனைந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டச் செயலாளர் தமிழ்ப்பெருமாள் தலைமை வகித்தார்.
கரோனா தடுப்பூசியை மத்திய அரசு உரிய அளவு தமிழகத்துக்கு வழங்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.