Regional02

கஞ்சா விற்ற 3 பேர் கைது :

செய்திப்பிரிவு

திருவாரூர் நகர பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததாக, அழகிரி காலனி பகுதியைச் சேர்ந்த ராஜா (35), ஸ்டாலின்(32), சிவசங்கர்(35) ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் இரவு திருவாரூர் நகர போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 750 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, கடத்தல், பதுக்கல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் எஸ்.பி சீனிவாசன் எச்சரித்துள்ளார்.

SCROLL FOR NEXT