பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் சைக்கிள் பேரணியை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார். 
Regional01

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் :

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்துதிருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ்சார்பில் தச்சநல்லூரில் இருந்து திருநெல்வேலி சந்திப்பு வரை சைக்கிள் பேரணி நடத்தஏற்பாடு செய்யப்பட்டது. வாகன பேரணிக்குபோலீஸார் அனுமதி அளிக்காததால், மாநகர்மாவட்டகாங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன்தலைமையில் தச்சநல்லூரில் திரண்ட காங்கிரஸ் கட்சியினர், காந்திசிலையிடம் மனு கொடுத்து நூதன போராட்டம் நடத்தினர்.

தென்காசி மாவட்டம் சுரண்டையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்துகாங்கிரஸ் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. பழனி எம்எல்ஏ தொடங்கிவைத்தார்.

நாகர்கோவில்

தூத்துக்குடி

கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் மோட்டார் சைக்கிளுக்கு பாடை கட்டி ஊர்வலமாக எடுத்து வந்து, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் திருப்பதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT