Regional01

இளம்பெண் கொலை: தாய், சகோதரி கைது :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள முத்துவீரப்பபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகள் சேர்மகனி (35). கணவரை பிரிந்த இவர், பெற்றோருடன் வசித்து வந்தார். நேற்று சேர்மகனி மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மூலக்கரைப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தைமீட்டு பிரேத பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இதில், சேர்மகனி நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது தாய்முருகம்மாள் (60), சகோதரி அருணாசலம் என்ற செல்வி (30) ஆகியோர் சேர்மகனியை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT