கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. 
Regional01

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் - உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு :

செய்திப்பிரிவு

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நிரந்தர மற்றும் தற்காலிக குடும்பநல முறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கண் காட்சியினையும், விழிப்புணர்வு ரதத்தினையும் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து மக்கள் தொகை பெருக்கத்தினை கட்டுப்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதை ஆட்சியர் பார்வையிட்டு, குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பழ வகைகளை வழங்கினார்.

இணை இயக்குநர் (மருத்துவநலப்பணிகள்) மருத்துவர் ரமேஷ்பாபு, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மருத்துவர் செந்தில்குமார், துணை இயக்குநர் (தொழுநோய்) மருத்துவர் சித்திரைசெல்வி, மாவட்ட சித்த மருத்துவர் மருத்துவர் ராஜகுமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT