Regional02

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு :

செய்திப்பிரிவு

நாகரசம்பட்டியில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அடுத்த அப்பு கொட்டாய் பகுதியைச் சேர்ந்த விவசாயி ரங்கதாஸ் (30). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றிருந்தார். பின்னர் வீட்டுக்கு அவர் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது.

அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 1 பவுன் நகை மற்றும் ரூ.4 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக நாகரசம்பட்டி போலீஸார் விசாரித்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT