பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை உயர்வை கண்டித்து, அரியலூர் மாவட்டம் திருமானூரில் பெட்ரோல் பங்க் முன் மகளிர் காங்கிரஸார் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்பாட்டத்துக்கு, மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி மாரியம்மாள் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் சந்தானம், வட்டார துணைத் தலைவர் கங்காதுரை, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் விஜயகுமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.