ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அகநிலைத் தர உறுதிப் பிரிவில் பேராசிரியர் மேம்பாட்டு நிகழ்வு 2 நாட்கள் நடைபெற்றது. கல்லூரி தாளாளரும், வேளாளர் அறக்கட்டளை செயலாள ருமான எஸ். டி. சந்திரசேகர் தலைமை வகித்துப் பேசினார். கல்லூரி முதல்வர் முனைவர் ர.சரவணன் வரவேற்றார். ஹைதராபாத் விக்ஞான் ஜோதி மேலாண்மையியல் நிறுவன பேராசிரியர் முனைவர் எஸ்.பிராங்ளின் ஜான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு' நரம்பணுக்களைப் பயன்படுத்து வதன் மூலம் மதிநுட்பத்தோடு கற்றல் மற்றும் கற்பித்தல்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
கல்லூரி ஆலோசகரும், அறங்காவலருமான ச.பாலசுப்ரமணியம், கல்விப்புல முதன்மையர் முனைவர் சகிலா மேத்திவ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இரு தினங்கள் நடந்த பயிலரங்கில் 50 பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.