Regional02

கல்குவாரி வெடி விபத்தில் பெண் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

செஞ்சியை அடுத்துள்ள பெரும் புகை கிராமத்தில் உள்ள மலை பகுதிகளில் கல் குவாரி பல ஆண் டுகளாக நடைபெற்று வருகிறது.

இக்கிராமத்தையொட்டியுள்ள ஊரணித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி செல்வி(50) நேற்று தனது வயலில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அருகில் உள்ள கல்குவாரியில் பாறையை வெடி வைத்து தகர்த்துக் கொண்டிருந்த போது பாறை சிதறி, வயலில் வேலை செய்து கொண்டிருந்த செல்வியின் தலை மீது தாக்கியதில் படுகாயம் அடைந்த செல்வி தலை சிதறி உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். உடல் கூறு ஆய்வுக்காக அந்தப் பெண்ணின் உடலை எடுக்க முயன்றபோது கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்குவாரியின் உரிமையாளர் நேரில் வந்த பிறகுதான் உடலை எடுக்க அனுமதிப்போம் என தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து செஞ்சி வட்டாட்சியர் ராஜன், டிஎஸ்பி. இளங்கோவன் உள்ளிட்ட போலீஸார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உடலை எடுத்துச் சென்றனர்..

SCROLL FOR NEXT