Regional01

ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

சாயல்குடியைச் சேர்ந்தவர் சண்முகவேல்(67). ஓய்வுபெற்ற சிறப்பு எஸ்.ஐ. இவரது மகன் பாண்டியராஜன்(31). திருமணம் ஆகவில்லை. இவர் சாத்தூரில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் ரசாயன ஆலையில் பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து அலுவலகத்தில் இருந்து பாண்டியராஜன் புறப் பட்டார். இவர் நேற்று காலை விருதுநகர் அருகே பட்டம்புதூர் பகுதியில் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். அருகே அவரது இருசக்கர வாகனமும், இரு மொபைல் போன்களும் இருந்தன. விருதுநகர் ரயில்வே போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT