Regional02

ஜகதாப், எர்ரஹள்ளி ஊராட்சிகளில் குடிநீர் திட்டப்பணிகளை அமைச்சர் ஆய்வு :

செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் தொடர்பாக தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வினை தொடர்ந்து கிருஷ்ணகிரி வந்த அவர் மாலை காவேரிப்பட்டணம் ஒன்றியம் ஜகதாப் ஊராட்சியில் உள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை பார்வையிட்டார்.

மேலும் எர்ரஹள்ளி ஊராட் சியில் அமைக்கப்பட்டுள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை பார்வையிட்டு, தண்ணீர் வழங்கும் முறை குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சணாமூர்த்தி, ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், முன்னாள் எம்எல்ஏ., செங்குட்டுவன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் செங்குட்டுவன், கண்காணிப்பு பொறியாளர் மணிகண்டன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT