Regional01

விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் :

செய்திப்பிரிவு

பெரம்பலூர்: தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ், காந்திவேல், ஜெயபால், கணேசன், மகளிர் அணி மாவட்டத் தலைவர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சித்த மருத்துவர் கோசிபா, மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் கருணாநிதி, திமுக பேச்சாளர் விஜயரத்தினம் உட்பட பலர் பேசினர்.

கூட்டத்தில், பெரம்பலூர் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கத்தில் அதிகளவில் உறுப்பினர்களை சேர்த்தல், அரசின் திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் பெற்றுத்தருதல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மாநிலத் தலைவர் பொன்குமாரை நலவாரிய தலைவராக நியமனம் செய்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, நலவாரியத்துக்கு உயிரூட்டம் கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, கட்டுமான தொழிலாளர் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அதிகளவிலான நலத்திட்ட உதவிகளை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT