Regional01

ஆயுதப்படை காவலர்களிடம் எஸ்பி குறை கேட்பு :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் ஆயுதப்படை காவலர்களிடம் குறை கேட்பு நிகழ்ச்சி தென்காசியில் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தலைமை வகித்து, காவலர்களிடம் குறைகளை கேட்ட றிந்து, தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

பணியின்போது காவலர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்கினார். கரோனா நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில் ஆயுதப் படை காவல் ஆய்வாளர் மார்டின், உதவி ஆய்வா ளர்கள் பொன்னுசாமி, அஞ்சூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT