பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் பிரேம்நாத் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம். கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் மணிவண்ணன், ஜெயக்குமார், விவசாய அணி மாவட்டச் செயலாளர் விஜயகுமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விறகு அடுப்பு கூட்டியிருந்தனர்.
தென்காசி
தூத்துக்குடி