வந்தவாசி அருகே மலைக்குன்றில் இருந்து உயிரிழந்த நிலையில் கூலித் தொழிலாளியின் உடல் நேற்று மீட்கப்பட்டது.
தி.மலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் வசித்தவர் கூலித் தொழிலாளி அண்ணாதுரை(46). இவரது விவசாய நிலம் அருகே உள்ள மலைக்குன்றில் இருந்து, அவரது உடல் உயிரிழந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டது.
இதுகுறித்து அண்ணாதுரையின் மகன் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் தேசூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அண்ணா துரையின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.