TNadu

போளூர் அருகே மண் சரிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கீழ்கரிகாத்தூரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது நிலத்தில் கடந்த 3 வாரங்களாக கிணறு தோண்டும் பணி நடைபெறுகிறது.

40 அடி ஆழத்துக்கு கிணறு தோண்டப்பட்டும் தண்ணீர் கிடைக்காததால், மேலும் பள்ளம் தோண்ட வெடி வைக்கும் பணியில் 3 தொழிலாளர்கள் நேற்று காலை ஈடுபட்டுள்ளனர். இதற்காக, கிணறுதோண்டிய பள்ளத்தில் துளையிடப்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட அதிர்வுகளால் மண் சரிந்துமூவரும் மண்ணில் புதைந்தனர்.

தகவலறிந்த போளூர் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 3 தொழிலாளர்களும் மேலே கொண்டுவரப்பட்டனர். அவர்களில், பெலாசூரைச் சேர்ந்த ரவீந்திரன்(31), புதுகரிக்காத்தூரைச் சேர்ந்த அர்ஜுனன்(48) உயிரிழந்தனர்.

ஆபத்தான நிலையில் இருந்த மாயக்கண்ணன்(38), போளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்துபோளூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT