Regional02

பனை தொழிலாளர், தென்னை விவசாயிகள் - நலவாரியங்களை புதுப்பிக்க : கள் இயக்கம் வலியுறுத்தல் :

செய்திப்பிரிவு

தமிழ்நாடு கள் இயக்கத் தலைவர்செ.நல்லசாமி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கடித விவரம்:

பனைத் தொழிலாளர் நல வாரியத்தையும், தென்னை விவசாயிகள் நல வாரியத்தையும் தமிழக அரசு புதுப்பிக்க வேண்டும்.2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கு பிறகு, குமரிஅனந்தன் தலைமையிலான பனை தொழிலாளர் நலவாரியத்தையும், ராஜ்குமார் தலைமையிலான தென்னை விவசாயிகள் நலவாரியத்தையும் அரசு கலைத்துவிட்டது. கடந்த 10 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை. தற்போது அமைந்திருக்கும் திமுக தலைமையிலான புதிய அரசு, இவற்றை புதுப்பிக்க முன்வர வேண்டும்.

கடந்த ஆண்டைப்போலவே, நடப்பு ஆண்டிலும் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். நீர் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இருந்ததால், கடந்தஆண்டு ஆகஸ்ட் மாதம் தண்ணீர்திறக்கப்பட்டது. இதே சூழல் நடப்புஆண்டிலும் இருப்பதால் வரும்ஆக.1-ம் தேதி நீர் திறப்பு அவசியம். முன்கூட்டியே அறிவிக்கப்பட்டால், நிலத்தை தயார் செய்வதற்கும், இடு பொருட்களை தேடுவதற்கும், திட்டமிட்டு செயல்படுவதற்கும் ஏற்புடையதாக இருக்கும்.தமிழ்நாட்டில் லஞ்சம் பெறாமல்எங்கும் நெல்கொள்முதல் செய்யப்படுவதில்லை. 40 கிலோ எடைகொண்ட நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 லஞ்சம் பெறுவது பரவலாக உள்ளது. விளைவித்த விவசாயிகள் நேரடியாக கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்வது குறைவாகவும், இடைத்தரகர்கள் மூலம் கொடுப்பது கூடுதலாகவும் இருக்கிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT