சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வனத்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஈர நில மேம்பாட்டு குழுக்கூட்டம் நடந்தது. இதில் ஆட்சியர் கார்மேகம் தலைமை வகித்தார். சேலம் மாவட்டத்தில் 15,270 ஹெக்டர் பரப்பளவில் உள்ள ஈர நிலங்களை பாதுகாப்பது குறித்தும், புதியதாக ஈரநிலங்களை கண்டுபிடித்து அவற்றை அறிவிக்கை செய்வது மற்றும் ஈரநிலப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
சேலம் மாவட்ட அளவிலான உயிர்ப்பன்மை மேலாண்மை வாரியக் கூட்டம், வன எல்லை நிர்ணயப் பணிகள், வனநில ஆக்கிரமிப்புகள், மலைத்தல மரப்பாதுகாப்பு சட்டம், சமுதாயம் சார்ந்த சூழல் சுற்றுலா இடங்கள் மற்றும் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா மேம்பாட்டு பணிகள், வன உரிமைச்சட்டம் 2006-ன் கீழ் மலைவாழ் மக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இப்பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் டாக்டர் முருகன் உள்பட வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.